உங்களிடம் இருந்து கேட்க விரும்புகிறோம்! உங்கள் பின்னூட்டத்தை வழங்க எங்கள் குறுகிய கணக்கெடுப்பில் பங்கேற்கவும் (விரைவில் வருகிறது). அடுத்த சில மாதங்களில் நகரம் வணிகங்களிடம இருந்து பின்னூட்டங்களைச் சேகரிக்கும், மற்றும் இறுதி செய்யப்பட்ட திட்ட முன்மொழிவை இந்த ஆண்டின் பிற்பகுதியில் நகர சபையின் நடவடிக்கைக்காக சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளது.
Bellevue நகரத்தில் செயல்படும் அனைத்து வணிகங்களிடம் இருந்தும், மொத்த வருவாயின் அடிப்படையில் நகரம் வரி வசூலிக்கிறது. கூடுதலாக, நகரத்தில் வணிக இடம் உள்ள நிறுவனங்களுக்கு சதுர அடி வரியும் விதிக்கப்படுகிறது. தற்போதைய கணக்கீட்டு முறையில், வணிகங்கள் தங்களுடைய இடத்தை பல்வேறு பிரிவுகளாக வகைப்படுத்தி, கழிவுகளுக்கும் விலக்கிற்கும் தகுதியான பரப்பளவை கணக்கிட வேண்டும். இந்த விலக்கு, சிக்கலான மொத்த வருவாய் சூத்திரத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இந்தக் கணக்கீடுகள் அதிக நேரம் எடுத்துக்கொள்வதுடன், வணிகங்களுக்கு சிரமமாகவும் குழப்பமானதாகவும் உள்ளன. இதனால் நிறுவனங்கள் மொத்த வரவு வரி மற்றும் சதுர அடி வரி ஆகிய இரண்டு வரிகளையும் சேர்த்து செலுத்த வேண்டிய நிலையும் ஏற்படலாம்.
நகரத்தின் சதுர அடி வரிக்கு உட்பட்ட வணிகங்களுக்கான வரித் தாக்கல் நடைமுறைகளை நகரம் எளிமையாக்குகிறது; அதன் மூலம்: 1) வரியைக் கணக்கிடுவது எளிதாகும், மற்றும்; 2) வணிகங்கள் மொத்த வருவாய் வரி அல்லது சதுர அடி வரி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் செலுத்தினால் போதும்; இரண்டையும் அல்ல. இந்த அணுகுமுறை பின்வருவனவற்றை உள்ளடக்கியுள்ளது:
- ஆண்டு மொத்த வருவாய் விலக்கு வரம்பை $215,000 இலிருந்து $500,000 ஆக உயர்த்துதல்
- ஆண்டு சதர அடி வரி வரம்பை 250 சதுர அடியிலிருந்து 2,500 சதுர அடியாக உயர்த்துதல்
- தற்போது தேவையாய் இருக்கும் பன்முக இட வகைப்பாடுகளை நீக்குதல்
- வரி விகிதத்தை ஒரு சதுர அடிக்கு ஆண்டுக்கு $1.25 இலிருந்து $1.00 ஆக அல்லது காலாண்டுக்கு $0.25 குறைத்தல்.
- செலுத்தப்படும் ஒவ்வொரு டாலர் மொத்த வருவாய் வரிக்கும் சதுர அடி வரியிலிருந்து ஒரு டாலர் வரி விலக்கு அளிப்பதன் மூலம், இந்த வரி விலக்கு முறையை எளிமைப்படுத்துதல்
முன்மொழியப்பட்டுள்ள புதிய முறையின் கீழ் நீங்கள் செலுத்த வேண்டிய ஆண்டு வணிக மற்றும்தொழில் வரியைக் (B&O Tax) கணக்கிட இந்த கால்குலேட்டரை பயன்படுத்தவும்.