உங்களிடம் இருந்து கேட்க விரும்புகிறோம்! உங்கள் பின்னூட்டத்தை வழங்க எங்கள் குறுகிய கணக்கெடுப்பில் பங்கேற்கவும் (விரைவில் வருகிறது). அடுத்த சில மாதங்களில் நகரம் வணிகங்களிடம இருந்து பின்னூட்டங்களைச் சேகரிக்கும், மற்றும் இறுதி செய்யப்பட்ட திட்ட முன்மொழிவை இந்த ஆண்டின் பிற்பகுதியில் நகர சபையின் நடவடிக்கைக்காக சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளது.
தற்போது Bellevue நகரம் ஒருமுறை மட்டுமே பெற வேண்டிய நிரந்தர வணிக உரிமத்தை (புதுப்பிக்கத் தேவையில்லை) வழங்குகிறது. தற்போதைய கட்டணம் $119.00 ஆகும். ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் இந்த வணிக உரிமமானது, நகருக்குள் இயங்கும் வணிகங்களை சென்றடைந்து மற்றும் அவற்றிற்கு ஆதரவளிக்கும் தேவைகளுக்காகப் புதுப்பிக்கப்பட்ட வணிகத் தகவல்களைக் கோரும் பல்வேறு நகரத் துறைகளுடனான தகவல் தொடர்பையும் ஈடுபாட்டையும் கட்டுப்படுத்தி குறைக்கிறது.
ஆண்டுதோறும் உரிமப் புதுப்பித்தல் தேவையை நகரம் ஏற்றுக்கொள்கிறது. இதன் நோக்கங்கள்: நகரில் செயல்படும் செயலில் உள்ள வணிகங்களின் துல்லியமான தரவுத்தளத்தை பராமரித்தல், வணிக சமூகத்துடன் தகவல் பரிமாற்றத்தையும் ஈடுபாட்டையும் மேம்படுத்துதல், மற்றும் நகராட்சி சேவைகளை மேம்படுத்துதல். சிறிய வணிகங்களுக்கு சமமான கட்டண அமைப்பை வழங்கும் வகையில், நிறுவனத்தின் மொத்த ஆண்டு வருவாய் அடிப்படையில் படிநிலை கட்டண அமைப்பும் இந்த முன்மொழிவில் இடம்பெற்றுள்ளது.
உரிமக் கட்டணத்திற்கு உட்படாத வணிகங்களும், தகவலுக்காக மட்டுமே உரிமப் படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். உரிமக் கட்டணமோ அல்லது செயலாக்கக் கட்டணமோ வசூலிக்கப்படாது.
முன்மொழியப்பட்ட படிநிலைகள் மற்றும் கட்டணங்கள்:
| மொத்த ஆண்டு வருவாய் | கட்டணம் |
|---|---|
| $0 - $50,000 | $0 |
| $50,001 - $250,000 | $50 |
| $250,001 - $1,000,000 | $150 |
| > $1,000,000 | $350 |